Wednesday, 21 March 2012

எது காதல் ?


எது காதல் ? 

உருவங்கள் என்னும் இரு 
துருவங்களிடையே 
உண்டாவது காதல்!... 
இலக்கணம் ... 
காதலுக்கு இல்லாமல் போகலாம்... 
காதலர்களுக்கு கட்டாயம் வேண்டும் 
இலக்கு - 
திருமணமாக இல்லாமல் போகலாம்... 
கண்ணியத்தில் 
களங்கம் கலக்காதிருத்தல் வேண்டும்... 
உடல்களின் 
உணர்ச்சிகளை மட்டும் வாசிப்பதல்ல 
காதல்! ... 
உயிர்களின் உணர்வை நேசிப்பது. 
காதல் .. 
அதிரடி காதலும் 
அனுதாபக் காதலும் 
அலைகளினிடையே குப்பையைப் போல... 
கடலுள் சேர்வதும் 
கரையினைக் கடப்பதும்... 
இல்லவே இல்லை... 
ஆழ்கடல் மேலே 
அருமைப் படகு தவழ்வது போல ... 
மெல்லிய உணர்வின் 
மேன்மைக் காதல்... 
அலைதலும் இல்லை ... 
அவதியும் இல்லை... 
புரிந்து கொள்வதும் 
புரிய வைப்பதும் புதிராய்ப் போகையில் 
புதைகுழிக்குள் புகுந்துவிடும் 
புனிதக் காதல் ... 
பார்த்திருக்க காத்திருப்பது 
கௌரவக் காதல்... 
திருமணத்தில் சேர்ந்திருக்க 
காத்திருப்பது 
சீர்பெற்ற காதல்... 
கடமையை மறவாது... 
கண்ணியத்தில் நழுவாது ... 
கட்டுப்பாடு மீறா 
உண்மைக் காதல்... அதுவே 
தெய்வீகக் காதல்...

2 comments:

Pls command